ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகத்தினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு உணவகத்தினை திறந்து வைத்து, முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சிறுதானிய உணவகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய உணவகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் தரமாக உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், சிறுதானிய திண்பண்டங்கள் போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த சிறுதானிய உணவகத்தில் தரமான பொருட்களை, நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை வட்டங்களைச் சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் தொழில்முனைவோர் நிதிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் உட்பட பலர் உள்ளனர்.
0 coment rios: