மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (பிப்.16) மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அறைகூவல் விடுத்தது.
அதன்படி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து வருமான வரித்துறை ஊழியர் கூட்டமைப்பினர் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்க வேண்டும். 8ஆவது மத்திய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கட்டூரி அபிஷேக் தலைமை வகித்தார். சரக செயலாளர் மேபிள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
0 coment rios: