தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அதாவது 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அதன் தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தினர், இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஈரோடு விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
0 coment rios: