அந்த வகையில், செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், ஓய்வூதிய இயக்கக இயக்குநரும் , அரசு கூடுதல் செயலாளருமான ஸ்ரீதர் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம், ஊதிய நிர்ணயம், நிலுவைத்தொகை, பொது சேமநலநிதி தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தினர் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பலன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தினார். மேலும், கடந்த மாதம் நடைபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், (பிப்.27) இன்று பெறப்பட்ட மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், சென்னை இயக்குநர் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட கருவூல அலுவலர் (மு.கூ.பொ) வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குருநாதன் மற்றும் ஓய்வூதியதாரர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: