வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஈரோடு விற்பனைக் குழுவின் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பில் முதன்மை பதப்படுத்தும் மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் முதன்மை பதப்படுத்தும் மையத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்தியூரில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட முதன்மை பதப்படுத்தும் மையத்தை பார்வையிட்டார். அப்போது, அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, ஈரோடு விற்பனைக் குழு செயலாளர் சாவித்திரி, வேளாண்மை துணை இயக்குனர் (வே.வ) மகாதேவன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மற்றும் அலுவலகப் பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: