கச்சத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்களை மீட்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு காளை மாட்டுச் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் அல்டிமேட் தினேஷ், விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான ராஜேந்திரன், ரவி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர்களான அம்மன் மாதேஷ், பாஸ்கர்ராஜ், மாவட்ட பொது செயலாளர் வின்சென்ட், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜூபைர் அகமது, துணைத் தலைவர் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தீபா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் பிரகாஷ், மாநில வழக்கறிஞர் பிரவு துணைச் செயலாளர் வினோத் மாரியப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: