விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.1.46 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் என 81 பயனாளிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: