வியாழன், 29 பிப்ரவரி, 2024

இந்திய கூட்டணியில் அதிமுக இடம் பெறுமா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதில் கிடைக்கும்.... சேலத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகை செல்வன் பேட்டி....

சேலம்.

S.K. சுரேஷ்பாபு.



சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் வைகைச் செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசியது,

அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் சுமூகமாக  நடைபெற்று வருகிறது. கூட்டணி முடிவு எட்டிய பிறகு தலைமை கழகம் சார்பாக முடிவு அறிவிக்கப்படும்.

திமுக,காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கான மருந்து அதிமுகவுடன் இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டி பிரதமர் மோடி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.

 தூத்துக்குடி ராக்கெட் ஏவுதலத்தில் சீன கொடி பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு அரசு விளம்பரத்தில் இந்தியாவின் கொடி தான் இருக்க வேண்டும்; வேற்று நாட்டின் கொடி குடியிருப்பது நல்ல செய்தியாக பார்க்க முடியாது.

 இந்திய கூட்டணியில் அதிமுக இணை வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதில் கிடைக்கும்.

 தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் உறவில் தான் இருந்தார்கள். தற்போது பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது  இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்ததால் தாக்கம் இருக்காது.

 பாமக உடனான கூட்டணி  உள்ளதா என்பது குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் நல்ல பதில் தலைமை கழகம் சார்பாக அறிவிக்கப்படும். அதிமுகவின் முக்கிய அறிவிப்பு நல்ல நல்ல அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் அறிவிப்பார்.

 நாடாளுமன்ற தேர்தல் குறித்து  மிகப் பெரிய வியூகங்களை, யூகங்களை அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

 ஓபிஎஸ் தரப்பு அதிமுகவை மீட்க வேண்டும் என்று பேசியது குறித்த கேள்விக்கு அதிமுகவை அதிமுக பொதுச்செயலாளர் மீட்டெடுத்து விட்டார் 

ஓபிஎஸ் தரப்பிற்கு வேறு வழியே இல்லை கடைசி வாய்ப்பாக  பாஜகவுடன் இணைவது மட்டும் தான் அங்கும் சில சிக்கல்கள்  இருப்பதாக தகவல் வந்துள்ளது என்றும் தெரிவித்தார் 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: