புதன், 21 பிப்ரவரி, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: தாளவாடியில் கள ஆய்வில் ஆட்சியர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் கீழ், தாளவாடி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்று, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாளவாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தாளவாடி ஊராட்சி ஒன்றியம் சேஷன்நகர் கிராமத்தில் 15-வது நிதிக்கு மானியத்தின் கீழ் ரூ.47.56 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டும் பணியினையும், அதேப்பகுதியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1.22 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் கழிப்பறை கட்டப்பட்டு வருவதையும், தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.79 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை ஆய்வு மேற்கொண்டு, ருசித்து பார்த்தார். மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகைபுரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றையும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தாளவாடி சார்பதிவாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பத்திர பதிவிற்கு வந்தவர்களிடம் விரைவாக பதிவு செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் பத்திரப்பதிவிற்கான தொகை செலுத்தியதற்கான ரசீதினைப் பார்வையிட்டார். இதனையடுத்து, பனஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, கணினி மூலம் பொதுமக்களுக்கு வங்கி கடன், பயிர்கடன் மற்றும் நகை கடன் வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சங்க வளாகத்தில் செயல்படும் உரக்கிடங்கினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இருப்பில் உள்ள உரங்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாளவாடி ஊராட்சி ஒன்றியம், ஆனந்தபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் அமிர்தா குளம் வெட்டப்பட்டு வருவதையும், பனஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் திகினாரை நியாயவிலைக் கடையினையும் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திகினாரை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் ராமசாமி மற்றும் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: