கட்டுமானப் பொருள்களின் அடிப்படை தேவையான ஜல்லி மற்றும் கிரஷர் மணலின் விலை கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 90 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினை குறைக்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இன்று ஈரோடு அடுத்த பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ஏராளமான லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து தமிழ்நாடு கட்டுமான நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் திருச்செந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜல்லி மற்றும் கிரஷர் மணலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஒப்பந்தப்படி தங்களால் கட்டுமான வேலைகளை தொடர் இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும் இதன் காரணமாக அரசு கட்டுமான பணிகள் மட்டும் இன்றி தனி நபர்களின் கட்டுமான பணிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: