நாட்டு இன மாடுகள் பால் உற்பத்தியை அதிகரிக்க நியாய விலைக் கடைகளில் மூலம் பால் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகள், பசுக்கள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காங்கேயம், புளிய குளம், செவலை,மயிலை, ஓம்பளச்சேரி குட்டை ரக போன்ற நாட்டு இன மாடுகள் 20 பிரிவின் கீழ் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் நாட்டு இன மாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் ரஞ்சித் பேசியதாவது, அழிந்து வரக்கூடிய ஒன்றில் நாட்டு இன மாடுகளும் ஒன்றாக உள்ளது. மது கடைகளில் மது விற்பனை செய்வது போல நியாய விலைக் கடைகளில் பால் விற்பனை செய்ய முடியாத.?. புகையிலையால் இதய நோய் புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. கரும்புக்கு, நெல்லுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வரும் நிலையில் கஞ்சா பயிர் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றது வேதனையாக உள்ளது.
நாட்டு மாடு பால் குறைவாக கரத்தாலும் தரமானதாக இருக்கிறது. ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுக்கிற அரசுக்கு நாட்டு மாடுகளை பாதுகாக்க தெரியாதா. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நீண்ட காலமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கிடப்பில் உள்ளது. நாட்டு மாடு,விவசாயம், குடிநீர் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு மாடு பால் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். நாட்டு மாட்டில் ஊட்டசத்து நிறைந்ததாக உள்ளது. திரைப்படம் இயக்கும் பணி முடிந்துவிட்டது. பாலில் கலப்படம் உள்ள சூழலில் நாட்டு மாடு இனத்தில் நுண்ணுயிர் ஊட்டச்சத்து நிறைந்த பால், நாட்டு மாடு பால் உற்பத்தி ஊக்கப்படுத்த நியாய விலைக் கடைகளில் பால் விநியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 coment rios: