இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் கடந்த 2ம் தேதி அப்பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் 1,550 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் என்கிற மனோகரன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மானோகரனை கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று மானோகரனை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவிட்டார். இதையடுத்து மானோகரன் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 coment rios: