சேலம்.
S.K. சுரேஷ்பாபு
சேலம் மாநகராட்சி பகுதியில் 1கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஓடை கட்டும் பணி.
சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட இராமமூர்த்தி புதூர் பகுதியில் நடைபெற்று வரும் ஓடை கட்டும் பணியினை சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் நேரில் பார்வைக்கு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த ஓடை கட்டும் பணியினை ஏற்று பார்வையிட்ட ஆணையாளர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆய்வு பணியின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 coment rios: