விசாரணையில் அவர், 'பெருந்துறை அருகே உள்ள ஓடப்பாறை கல்வி நகர் பகுதியை சேர்ந்த பழனி சாமி (வயது 48) என்பதும். சென்னிமலை பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை ஊத்துக்குளியில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற் பதற்காக கடத்தி சென்றார்' என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 17 மூட்டை ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: