இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் 2,666 முதன்மை அலுவலர்களும், 2,666 முதல் நிலை அலுவலர்களும், 2,666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2,666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,970 அலுவலர்கள் தேர்தல் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
இதில், 2,222 வாக்குச்சாவடிகளில், 255 வாக்குச்சாவடிகள் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை ஆகும். அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் மங்களம் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாலும் முறை மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளுமாறும், ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக நடைபெற நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: