திங்கள், 25 மார்ச், 2024

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவிலில் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது மனைவியும்  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளருமான  சௌமியா அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, சேலம் மாநகர மாவட்ட செயலாளர் இரா.அருள் எம்எல்ஏ, சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கதிர். ராசரத்தினம் மற்றும் பசுமைத்தாயக மாநில இணைச்செயலாளர் சத்ரிய சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: