சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி எம் செல்வகணபதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் சேலம் மாவட்ட ஆட்சியரும் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திருமதி பிருந்தா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜேந்திரன், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ பி பாஸ்கர், சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 coment rios: