ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு, 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: