கல்லூரி பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 30ம் தேதி சனிக்கிழமையன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
மேலும், உள்ளூர் விடுமுறை நாளான 26ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: