திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் திமுக போட்டியிடுமா? காங்கிரஸ் போட்டியிடுமா? மதிமுக போட்டியிடுமா? என்ற கேள்வி தொடக்கத்தில் இருந்தது. இறுதியாக திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டதுடன், வேட்பாளராக திமுக இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் கே.இ.பிரகாஷ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதுபோல் ஈரோடு தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்குவதுடன், வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் திமுகவும், அதிமுகவும் ஈரோடு தேர்தல் களத்தில் நேரடியாக சந்திப்பது உறுதியாகி உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுவரை ஈரோடு தொகுதியில் நடந்த 3 தேர்தல்களில் அதிமுக கூட்டணி 2 முறை வெற்றி பெற்று இருக்கிறது. 2009ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு மதிமுக வென்றது. 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுக நேரடியாக களம் இறங்கி வென்றது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: