ஈரோடு தபால் அலுவலகத்தில் வருகின்ற 28ம் தேதி மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் வருகின்ற 28ம் தேதி தேதி காலை 11 மணிக்கு ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தபால் (அஞ்சல்) அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்படும்.
இது தொடர்பான புகார்கள் மனுக்கள் இருப்பின், அவற்றை தபால் மூலம் வருகிற 22ம் தேதிக்குள் 'அஞ்சலக கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.22ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புகார்கள் மனுக்கள் நேரடியாக பெற்று கொள்ளப்படும்.
மேலும், புகார் மனுவில், புகார் தொடர்பான முழு விபரம், ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். அந்த மனுக்களின் உறையின் மேற்பகுதியில் குறைகேட்பு நாள் மனு என குறிப்பிட வேண்டுமென அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 coment rios: