S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த விசிக மாமன்ற உறுப்பினர்.....
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. சேலம் மாநகராட்சியில் 44 வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் பாலச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சி 44 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஜே.மு. இமயவரம்பன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு பணிகளில், தனது கோட்டத்திற்கு உட்பட்ட கிச்சிபாளையம் பகுதியில் செல்லும் வெள்ளை குட்டை ஓடையை தூர்வாரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் சேலம் கிச்சிபாளையம் பகுதியில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் உள்ள சேலம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சேலம் மாநகர மேயர் மற்றும் சேலம் மாநகர ஆணையாளர், அதே பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் தெரு மற்றும் மேலக்கார வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மற்றும் சாக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை அடுத்து சேலம் குப்பைமேடு அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி அங்குள்ள பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாமன்ற உறுப்பினர் ஜே மு இமயவரம்பன் வேண்டுகோளின் அடிப்படையில் அந்த பகுதியை மேடாக்கி அது மட்டுமல்லாமல் அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி அங்கு ஏற்கனவே இருந்த குளத்தை மறு சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும் சீரமைக்கப்பட்ட குப்பை மேட்டு பகுதியை ஆய்வு மேற்கொண்ட அவர்கள் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து சேலம் கிச்சிபாளையம் ஏடிசி டெப்போ அருகே உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரி சீரமைத்து ஒரு காலத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரமாக இருந்ததைப் போன்று தற்போது மீண்டும் அதனை சீரமைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் கோரிக்கையை முன் வைத்தார்.
மாமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கேட்டு அறிந்த சேலம் மாநகர மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர், தங்களது கோரிக்கை அனைத்தும் பரிசளிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செய்து தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்தனர்.
மாநகர மேயர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரின் இந்த ஆய்வு பணியின் போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: