புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் மேசப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆறு மணிக்கு மேல் கைரேகை பதிவிடும் பணியை கைவிடுவது, பொதுப்பணி நிலை முரண்பாடுகளை கலைவது பயிர் கடன் விதிமுறை ரத்து செய்வது, ஓய்வு கால நிதி பயன்களை வழங்கிடுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 coment rios: