இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் என மொத்தம் 325 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: