ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. வேலைக்கு பெண்கள் மற்றும் மாணவ,மாணவிகள் என ஏராளமானோர் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்று பேருந்து ஏறி செல்வது வழக்கம்.
தற்பொழுது வெயில் காலம் என்ற காரணத்தினால் பேருந்து நிறுத்தத்தில் அமர்வதற்கான இருக்கை காரணத்தினாலும் வயதான முதியவர்கள் மற்றும் பெண்கள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்படும் விளம்பர பதாகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு அமருவதற்கு இருக்கை வசதியை அனைத்து பேருந்து நிலையத்திலும் இருக்கிறதா என ஆய்வு செய்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
0 coment rios: