பவானி யூனியனுக்குட்பட்ட மயிலம் மற்றும் சன்னியாசிப்பட்டி கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அதிரடி ஆய்வு செய்தார். அதன்படி பவானி மயிலம்பாடி பஞ்சாயத்து கண்ணடி பாளையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு புனரமைப்பு செய்யப்படும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவ மாணவிகளிடம் உரையாடி குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் எண்ணும் எழுத்தும் கல்வித்திட்ட பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மயிலம்பாடி, சாணார் பாளையம், கண்ணன் கரடு பகுதியில் யூனியன் நிதியில் ரூ.25.60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் சன்னியாசிபட்டி பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்படும் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் அரசு வளர்ச்சி திட்டபணிகளை தொய்வின்றி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.
0 coment rios: