இந்த ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கட்டிடங்கள் பராமரிப்பு பணி மற்றும் வர்ணம் பூசுதல், முதிர்வு காலம் முடிந்த மருத்துவ இயந்திரங்கள், பயன்பாடில்லாத பழைய பொருட்களை கழித்து ஒதுக்குதல், மருத்துவமனையின் முகப்பு பகுதியில் செடிகளை வைத்து அழகு படுத்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மருத்துவமனை, கல்லூரி, சமையல் கூடம், சலவை கூடம் உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை வர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, கல்லூரி முதல்வர் வள்ளி உட்பட மருத்துவர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: