சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் நல சங்கத்திற்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறிதியாக அறிவித்ததை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென சங்கத்தின் மாநில தலைவர் சேலத்தில் பேட்டி....
தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில தலைவர் சிவகுமார் கூறும்போது தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் நல சங்க த்தில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் இந்த தொழிலை சார்ந்து ஒட்டுமொத்தமாக 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக போட்டோகிராபர் நல சங்கத்திற்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது எனவே போட்டோகிராபரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனிநல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பணியின் போது போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோ பணிக்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலேயே பணி வழங்கப்பட்ட வந்த நிலையில் தற்போது தனி நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது இதனை தவிர்த்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலேயே தேர்தல் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது தேர்தல் பணியின் போது வீடியோ மட்டும் போட்டோகிராபர் பாதுகாப்பு கருதியும் உபகரணங்களுக்கு பாதுகாப்பு கருதி தேர்தல் ஆணையம் மற்றும் அரசு பாதுகாப்பு காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த எங்களின் மிக முக்கிய கோரிக்கையான தனிநல வாரியம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் பேட்டியின் போது மாநில பொருளாளர் சுரேஷ் துணைத் தலைவர் அசோக் மண்டல செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: