இரவு பகலாக இந்த சட்டவிரோத விற்பனை நடைபெற்று வருவதால், அந்த வழியாக செல்லும் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசில் அப்பகுதி மக்கள் புகார் செய்தனர். ஆனாலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரியும், விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஈரோடு - பவானி பிரதான சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஏற்பட்டது.
0 coment rios: