சனி, 23 மார்ச், 2024

ஸ்ரீ சென்ராய பெருமாள் திருக்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.


சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வணங்கினார்.


பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்து உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை திருச்சியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் தேமுதிக ,
புதிய தமிழகம்,
 எஸ் டி பி ஐ கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலின் போதும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகையில் இருக்கும் ஸ்ரீசென்றாய பெருமாள் சாமி ஆலயத்திற்கு வந்து வணங்கி பின்னர் பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம்.
இதுபோல் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 
பெரிய சோரகையில் உள்ள 
 ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி ஆலயத்திற்கு வந்தார்.
இங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ் மற்றும் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதன் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீ சென்றாயப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வணங்கினார்.
இதன் பின்னர் அவர் பெரிய சோரகை பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்றும், பொதுமக்களை சந்தித்தும் நோட்டீஸ் வழங்கிய அதிமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
இதில் சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: