சேலம்.S.K. சுரேஷ்பாபு
மாணவ மாணவிகளுடன் குத்தாட்டம் போட்டபிரபல நகைச்சுவை நடிகர் பாலா...
பாண்டிச்சேரி சிறுமி விவகாரம் உச்சகட்ட தவறு அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் மிகப் பெரிய தவறு இது போன்ற இறக்க மற்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்நடிகர் பாலா பேட்டி ....
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் ஆண்டு விளையாட்டு
நடைபெற்றது. விழாவிற்கு பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் பாலா கலந்துகொண்டு மாணவ மாணவிகளுடன் திரை இசை பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டாடினார்
பல்வேறு நடிகர்களின் குரல்களில் பேசி அசத்தார் தொடர்ந்து மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் நடனமாடி மாணவ மாணவிகள் அசத்தி தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா கூறுகையில், பாண்டிச்சேரி விவகாரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உச்சகட்ட தவறு அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் இது போன்ற இரக்கமற்ற ஆட்களால் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது செயலை செய்தவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். மேலும் நடிகர் விஜய் அவர்களுக்கு குறித்து பேசுவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை அறிவும் இல்லை விஜய் உச்சத்தில் உள்ள நடிகர் நான் மீண்டு போன மிச்சத்தில் உள்ள நடிகர் அவரைப் பற்றி பேச எந்த தகுதியும் எனக்கு இல்லை தளபதி விஜய் சார் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் எனக்கு அரசியலில் பங்களிப்பு தெரியாது மக்களுக்கு அன்பளிப்பு வழங்க தான் எனக்கு தெரியும் என்றார்.
மேலும் நடிகர் அஜித் அவர்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மீண்டு வருவார் அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒத்தை தலைக்காக லட்சம் தலை உள்ளது மீண்டு வருவார்விடாமுயற்சி திரைப்படம் போல வீறு கொண்டு நடை போடுவார் என்று பேசினார்.
0 coment rios: