சனி, 9 மார்ச், 2024

கோபிசெட்டிபாளையத்தில் நெல் வயல் தின விழா

ஈரோடு மாவட்டம் கோபி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பாரியூர் கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது. இவ்விழாவானது புதிய அறிமுக நெல் ரகமான கோ 55 பயிரிடப்பட்டுள்ள நெல் வயலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். அப்போது, நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மற்றும் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில் பவானிசாகர் ஆராய்ச்சி நிலைய பயிர் மரபியல் துறை விஞ்ஞானி அமுதா கலந்துகொண்டு கோ 55 நெல் ரகத்தின் சிறப்பியல்புகள் பண்புகள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் கோ 51, கோ 53, கோ 56, கோ 57, கோ 58, ஏ டி டி 36 மற்றும் எடிடி 56 போன்ற நெல் இரகங்களின் சிறப்பியல்புகள் குறித்தும், குணாதிசயங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். விழாவில், கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை விஞ்ஞானி பிரேமலதா கலந்து கொண்டு மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மண் பரிசோதனை ஆய்வின் அடிப்படையில் உரமிடுதல் மற்றும் நெல் புளூம் தெளிப்பதற்கான முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

கோபி உழவர் சந்தை துணை வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உழவர் சந்தையின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.. ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு நெல் நல்விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி தொழில்நுட்பங்களை செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இவ்விழாவில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: