தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (29ம் தேதி) முதல் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஈரோடு தொகுதியில் 'இந்தியா கூட்டணி' சார்பில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் இன்று (29ம் தேதி) வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை ஈரோட்டில் தொடங்குகிறார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதைத் தொடர்ந்து இரவு 6.30 மணிக்கு கருங்கல்பாளையத்திலும், இரவு 7.30 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெப்படையிலும் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
0 coment rios: