சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி...சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை.
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் மத்திய மாநில சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகநாதன் மற்றும் சிவசுப்பிரமணிய பிள்ளை, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், லட்சுமி, மயில், மாறன், வேடியப்பன், முருகன் மற்றும் கணேஷ் உட்பட தனி வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோ பங்கு வகித்தனர்.
கூட்டத்தில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் மற்றும் செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அது மட்டும் இல்லாமல் சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி கொலுசு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வெள்ளி கொலுசு தயாரிப்பு தொடர்புடைய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், நடைபெற உள்ளே இந்த நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் சோதனை என்ற பெயரில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் இடத்திற்கே வந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெள்ளி கொலுசு தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை கைப்பற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வெள்ளி கொலுசு தயாரிப்பு தொடர்புடைய அத்தனை பேரின் எதிர்பார்ப்புக்கு இணங்க அந்த சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவியிடம் முன்வைத்தார்.
0 coment rios: