தேசிய ஜனநாயக கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமாரின் தேர்தல் பரப்புரை இன்று துவங்கியது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளுடன் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலவமலை ஊராட்சி பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை துவங்கினார். இன்று தேர்தல் பரப்புரையை துவங்கிய வேட்பாளர் எலவமலை ஊராட்சி, காளிங்கராயம்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி, பா.ஜ.க ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம், பாஜக ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் குமார், மாநில நிர்வாகி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், சந்திரசேகர், முகமது ரஃபீக், அன்புத்தம்பி உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
0 coment rios: