சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மனு தாக்கல்.....
இறுதி நாளில் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அகில பாரத இந்து மகா சபா கட்சி வேட்பாளர் மனு தாக்கல்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று மதியம் 3 மணி அளவில் நிறைவு பெற்றது இதனைஅடுத்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சார்பில் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவியிடம் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக புளோரா ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலத்தில் இதுவரையில் 52 பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ப்ளோரா ஆறுமுகம் என்பவர் மட்டும் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது..
வேப்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப்ளோரா ஆறுமுகம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் சரி செய்து தருவேன் என்றும் தொகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்று நிறைவேற்றித் தருவேன் என்றும் உறுதியளித்தார். மேலும் பெண்களின் கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களை மத்திய அரசிடம் நினைவூட்டி பெற்று பெண்களை பாதுகாப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
0 coment rios: