தொடர்ந்து , ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 10 மாணவ, மாணவியர்களுக்கு மலர் கொத்து, எழுத்துப் பலகை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். பின்னர், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார், ஆய்வாளர் மோகன் குமார், 2ம் மண்டல குழு தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 coment rios: