சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் விநாயகப் பெருமானின் பெயர்களைக் கொண்ட இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்..... கஜமுகனின் ஆதரவு யாருக்கு....... வருகின்ற ஜூன் 4 அன்று விடை தெரியும்.....
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்நோக்கி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதிலிருந்து சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தமிழக முழுவதும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி பிருந்தா தேவியிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் இருவருக்குள்ளேயும் ஒரு தொடர்பு உள்ளது.
ஆம்,.............
கஜமுகன் ஒருவரின் இயற்பெயர்களை கொண்டவர்களே அந்த இருவரும்.
திமுக சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் செல்வகணபதி மற்றொருவர் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ். ஆக இருவரும் முழு முதற் கடவுளின் பெயர்களை கொண்டவர்கள் என்பதே இவர்கள் அதாவது இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உள்ள ஒற்றுமை.
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானின் சகோதரரின் இயற்பெயர்களை கொண்ட இந்த இரண்டு வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து முனைப்புடன் செயல்பட்டாலும் இந்த இருவரில் அதாவது டி எம் செல்வகணபதி மற்றும் பி விக்னேஷ் ஆகிய இருவரில் யாருக்கு அருள் செய்யப் போகிறார் என்பதனை வருகின்ற ஜூன் 4ல் தான் தெரியவரும்.
சேலம் ஸ்ரீ ராஜகணபதியின் அருளாசி யாருக்கு கிட்ட போகிறது என்பதனை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.
சபா நியூஸ் தமிழ் டிஜிட்டல் செய்திகளுக்காக சேலம் செய்தியாளர் எஸ் கே சுரேஷ் பாபு.
0 coment rios: