இந்த நிலையில் நேற்று (4ம் தேதி) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 106.52 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். தொடர்ந்து, இன்று (5ம் தேதி) 106.16 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
106 டிகிரி பரான்ஹீட்டுக்கும் மேல் வெயில் தாக்கம் இருந்ததால் சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் இன்றும் கடும் அவதிப்பட்டனர். பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் குடைகளை பிடித்து படியும், துணிகளால் தலையில் மூடிய படியும் சென்றனர்.
வாகனங்களில் சென்றவர்களும் கடும் உஷ்ணத்தால் அவதிப்பட்டனர். இந்த வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க பொதுமக்கள் இளநீர், மோர், குளிர்பானங்கள் அருந்தி வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் இளநீர், மோர், பதனீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
0 coment rios: