சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சட்ட மாமேதையின் பிறந்தநாள் விழா..... நள்ளிரவு 12 மணி அளவில் மாலை அணிவித்தும், கேக் வெட்டியும், மத்தாப்புகள் கொளுத்தியும் உற்சாக கொண்டாட்டம்.
சட்டமாமேதை, புரட்சியாளர் அண்ணல் பீமாராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறை SC/ ST/ OBC ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலம் சுந்தர்ராஜ் லாட்ஜ் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலை முன்பு அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறை SC/ ST/ OBC ஊழியர்கள் கூட்டமைப்பு -
கூட்டு நடவடிக்கை பொதுச் செயலாளர் சரஸ்ராம்ரவி
தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மத்தாப்புகள் கொளுத்தி நள்ளிரவு 12 மணியளவில் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவின்போது, ராஜசேகர்
( வனதுறை), பிரபுதாஸ்
( GTR துறை ), சசிகுமார்
( கல்வி துறை ), பெர்ணான்டஸ்
( இரயில்வே துறை ), முனுசாமி
( ADW துறை ), வெங்கடேசன்- கீர்த்திவாசன்
( மின்வாரியம் துறை ), சுகுவனம்
( வங்கி துறை ), இராமசாமி - சுப்ரமணி
( தமிழ்நாடு மாநில வாணிப கழகம் ), சதீஸ்குமார்
( SWvck JAC ), வின்சென்ட்
( JAC ,), முரளிதரன் மற்றும் பிரகாஷ்.
( JAC ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 coment rios: