சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சட்ட மாமேதையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகள்.
நாடு முழுவதும் சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அதிகாலை சேலம் ஸ்டீல் பிளாண்ட் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வரும் வழியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா. அருள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோர் வந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆகியோரது வாகனத்தை தணிக்கை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: