இந்நிலையில், நடப்பாண்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக கடந்த 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) 109.4 டிகிரி வெயில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, 2வது முறையாக இன்று (22ம் தேதி) திங்கட்கிழமை 109.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். கத்தரி வெயில் தொடங்காத போதே இந்தளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், கத்திரி வெயில் காலம் தொடங்கும் பட்சத்தில் மேலும் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
ஈரோட்டில் இன்று 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
கோடை காரணமாக ஈரோட்டில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தொடா்ந்து, முதன்முதலாக மாா்ச் 14ம் தேதி 100 டிகிரியை கடந்து 104.3 டிகிரி பரான்ஹீட்டாக வெயில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு சற்று வெயில் குறைந்திருந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 6ம் தேதி 106.16 டிகிரியாக பதிவாகியிருந்த ஈரோடு வெயில் அளவு, கடந்த 8ம் தேதி 107.6 டிகிரியாகவும் வெயில் பதிவானது.
0 coment rios: