இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் தமிழ்நாடு - கர்நாடகா மாநிலம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டாரப் பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: