ஈரோடு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை ஆர்வமுடன் வந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்நிலையில், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்தி இந்து, முஸ்லிம், கிறித்தவ மதத்தைச் சார்ந்த 3 தோழிகள் வாக்களித்து விட்டு வந்த விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:- என் பெயர் பிரியதர்ஷினி, எனது தோழிகள் ஜவுகரா, இலக்கியா. நாங்கள் முவரும் ஈரோடு கிழக்குத் தொகுதி மண்டப வீதியில் குடியிருக்கிறோம்.
நான் மூன்று பேரும் ரொம்ப நல்ல தோழிகள். இந்த முதல் முறையாக வாக்களித்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் முவரும் காலையில் நேரமாகவே வாக்கினை பதிவு செய்தோம்.இதேபோல இளம் தலைமுறையினர் முன்வந்து புறக்கணிக்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இதனை ஒற்றுமையே வலியுறுத்தி கூறுகிறேன். என் என்றால் நான் இந்து, எனது தோழிகள் முஸ்லிம், கிறித்தவர். அதனால் இதனை தெரிவிக்கிறேன்.
இதேபோல, மற்றொரு மாணவி தெரிவித்ததாவது, என் பெயர் ஜவுகரா. நான் முதல் முறையாக வாக்களிக்கிறேன். நான் நீட் மாணவி. நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் மருத்துவம் படித்துக் கொண்டு இருந்திருப்பேன். கட் ஆப் 98 சதவீதம் வாங்கியுள்ளேன். முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
0 coment rios: