சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
குடும்பத்தினருடன் தேர்தல் திருவிழாவில் வாக்குப்பதிவு செய்த சேலம் தொகுதி திமுக வேட்பாளர்..
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தமிழக மற்றும் புதுவையில் இன்று தொடங்கியது.
காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்ற இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று காலை முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் காந்தி ரோடு அருகே உள்ள ஸ்ரீ சாரதா பால மந்திர் உதவி பெறும் துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சேலம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி மற்றும் அவரது மனைவி திருமதி பாப்பு செல்வகணபதி என குடும்பத்துடன் தேர்தல் திருவிழாவில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்தினருடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: