சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
குடும்பத்தினருடன் தேர்தல் திருவிழாவில் வாக்குப்பதிவு செய்த திமுக மாமன்ற உறுப்பினர்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தமிழக மற்றும் புதுவையில் இன்று தொடங்கியது.
காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்ற இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று காலை முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் வீராணம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள நியூ இந்தியன் டிஸ்கவரி ஸ்கூல் அமைக்கப்பட்டுள்ள வாக்கச்சாவடி மையத்தில், திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் மற்றும் அவரது மனைவி திருமதி வித்யா தேவலிங்கம் என குடும்பத்துடன் தேர்தல் திருவிழாவில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
0 coment rios: