இதனால் அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வெளியூரில் உள்ள வாக்காளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழக சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக நாளை 17ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 18ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களுக்கு ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: