ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள், எஸ்ஏஇ இந்தியா சதரன் பிரிவு ஆல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான மின் இருசக்கர வாகன வடிவமைப்புப் போட்டியில் ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய புதிய பேட்டரி மூலம் இயங்கும் மின் இருசக்கர வாகனத்திற்கு தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைக்கப்பெற்றது.
இந்த போட்டியில் ஐஐடி, என்டிஏ, அண்ணா யுனிவர்சிட்டி, ஜேஎன்டியூ, டெல்லி யுனிவர்சிட்டி உட்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 235 கல்லூரிகளில் இருந்து மாணவர் குழுக்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் வேளாளர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மூன்றாவது பரிசு பெற்றது நமது மாநிலத்திற்கே பெருமை சேர்க்கிறது என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகள் உட்பட்ட வல்லுநர் குழு பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டியில் சிறந்த வடிவமைப்புக்கான மூன்றாவது பரிசையும் வேளாளர் பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றனர். இவ்விரு போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய அளவில் கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவர்களுக்கு கல்லூரி அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயராமன், டீன் ஜெயச்சந்திரன் & நிர்வாக மேலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துறைத்தலைவர் குமாரவேலன் மற்றும் எஸ்ஏஇ கிளப் ஆசிரிய ஆலோசகர் மோகன்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0 coment rios: