தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு வழங்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்கு பிறகு வாகன எண், பயணிகளின் பெயர் போன்ற தகவல்களை சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால், மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 coment rios: