நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்ரல் 19ம் தேதி) வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறும், பொது விடுமுறை வழங்காத தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள்/கடைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: